38
மூலம்
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்–
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
எளிய தமிழில்
சேர்வேனே உன்பாதம் அடைக்கலமா யன்பாலே
பவளக்கொடி சிறந்த செவ்வாயுன் குளிர்த் திருநகையும்
துடியிடை சாய்க்கும் அழகிய பெருதனங் கொண்டவளே
எந்தை சங்கரன் குழைய வலியணை இன்பத் துணையே
பணிவேனுனை ஸ்வர்க்க ஸாம்ராஜ்ய போகம் ஆள்வதற்கே