39
மூலம்
ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.
எளிய தமிழில்
ஆள்வதெனை நின் திருவடித் தாமரை காலனிடம்
மீள்வதுநான் உன் கடைக்கண் பார்வையால் உனை
முயலாத தென்குறையே நின்குறையன்று தாயே
திருமாலை யம்பாய் மேருதனை வில்லாய் முப்புரமெரித்த
சிவனிடப் பாகமுறை சிவசக்தி ஒளியே