40
மூலம்
வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்–அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.
எளிய தமிழில்
ஒளியாய் நெற்றி திகழ் ஞானக் கண்ணே வுனைப்
பணிவாய் தேவரு மூவரும் விரும்பித் தொழ அன்பாய்
அரிதாய்க் காணும் கன்னிகை யெம்பெருமாட்டி யுனை
பேதை யெனக்கே பெருந்தவப் பேறாய் நான் தொழ
எண்ணிய எண்ணமென் முன்செய் புண்ணியமே