42
மூலம்
இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி–வேதப் பரிபுரையே.
எளிய தமிழில்
இடம் பரந்து ஒன்றோ டொன்றாய்ப் பருத்திறுகி
திடம் கொண்டு மெத்தெனவே குழைந்து முத்தார
வடம் அணிந்த பெருமலை தனங் கொண்டென்
திடம் பூண்ட எந்தை நெஞ்சசைத்து நல்லரவின்
படக் கடிதடம் வாய்மொழி வேதச் சிலம்பணிதேவியே