46
மூலம்
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
எளிய தமிழில்
வெறுக்கும் செயல்பல செயினும் தன்னடியாரைப் பெரியோர்
பொறுக்கும் தன்மை வழக்கமானதொரு யியல்பன்றோ
கறுக்கும் திருக்கழுத்தா னிடபபாகம் பொருந்திய பொன்னே
மறுக்கும் செயல்நான் செயினுமெனை வெறுக்காதே நீவெறுப்பினும்
விரும்புமென் மனமுன்னையே நான்புகழ்ந்தே வாழ்த்துவனே