48
மூலம்
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் ஏய்துவரோ-
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
எளிய தமிழில்
சுடரா யொளிரும் பூரண சந்திர மண்டலமுறை
நிலவும் பிரணவமா யெந்தை சதாசிவன் முடி
படரும் கொன்றை ரூப ஞான மணப் பசுங்கொடியே
இடர றுத்துய்விக்குமுனை நொடியேனும் நினைக்கு
மெமக்கே தீருமே கருவறைப் பிணியே