50
மூலம்
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.
எளிய தமிழில்
நாயகியே, நால்முகவடிவே, நாராயணியே, ஐவகைமலரம்பு
தரிஒய்யாரியே, சம்புசக்தியே, சங்கரியே, கரும்பச்சை சியாமளியே
நச்செழிலுடை நாகபாணியே, துர்க்கைக்கு முதலாம் வாராகியே,
சூலமேந்தியவளே, மதங்கர் குல தேவி மாதங்கியே, பலகீர்த்தி
உடையவளே நின்பாத சரணங்கள் அரணாகும் எமக்கே