52
மூலம்
வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,–பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
எளிய தமிழில்
வையகமுறை தேர் குதிரை மதயானை மாமகுடம் பல்லக்கு
பொழிதங்கம் பெருவிலை ஆரம் பிறை சூடிய ஐயனவன்
திருமனையாள் அபிராமி யுனைத் தொழுமடியார்க்கே முன்தவ
வினைப்பயனாய் விளைவதுவே இம்மைச் செல்வம் பலவும்
மறுமை வீடு பேறுமான செல்வச் சின்னங்களே