53
மூலம்
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
எளிய தமிழில்
சின்னஞ் சிறிய நின் திரு இடை அணியும் சிவந்த பட்டாடையும்
பென்னம் பெரிய ஸ்தனபாரமணி முத்துமாலையும் பிச்சிப்பூ மொய்க்கும்
கன்னங் கரிய நின் கூந்தலையும் கண்மூன்றும் கருத்தில் இருத்தி
தன்னந் தனியே மனம் நிலையாய் நிறுத்தியுனைத் தவம் செய்யடியார்
எண்ணந் தனில் உனைப்போல் வேறு பெருந்தவம் இலையே