56
மூலம்
ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்–என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்–
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.
எளிய தமிழில்
இலை ஒரு நிலை விரிசக்திபுரி யாவுங் கடந்துநின்ற அந்தர்யாமிநீ
அலை யன்பாய் எளியேன் நெஞ்சில் மறையா நிலை கொண்டே
மலை யுறுதி மாண்பாய் மன நெகிழ்வாய் மாட்சிமை தந்தாய்
நிலை குலையேன் நின்பாதம் நெஞ்சில் வைத்தே மகிழ்வேன்
இலை துயில் பெம்மானும் அறிவரே இப்பொருள் என் ஐயனுமே