57
மூலம்
ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?
எளிய தமிழில்
ஐயன் அளந்தளித்த இரு படி நெல்லால் அவனிப் பசிதீர்த்து
அறஞ் செய் அன்னையுனை பாமாலை பாடிப் புகழ வைத்தாய்
அருளிய தமிழ்மாலை கொண்டே மெய்பொய் கலந்தே நரனுக்கும்
இசைக்க வைத்த வுன்செயல் நின்னருளுக்குத் தான் அழகோ
துதியுனக்கே யன்றி நரருக்கன்றே யுன் அருளால்