59
மூலம்
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.
எளிய தமிழில்
தஞ்சம் பிறிதொரு யிடமில்லை உனை வழிபடும் தவநிலையே
நெஞ்சம் கோர்க்க முயன்றிலேன் நானும் நின் தவநிலைக்கே
நீள்வில்லும் ஐந்தம்பு கரும்புசகித மலராய்க் கரங்கொள் அபிராமியே
தஞ்சமே நீயென்றறிந்துமே உன்தவ வழி நடையே நினைக்கின்றிலேன்
பஞ்சுமே நோகுமேன்றே பதமாய் அடிவைக்கும் தாய்நீபெற்ற பாலன் நான்