60
மூலம்
பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க–
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ–அடியேன் முடை நாய்த் தலையே?
எளிய தமிழில்
பாலுமுன் சொல்முன் இனிக்குமோ இன்சொல் உடையவளே
சென்னியென் மேல் வைத்த அபரிமித அன்புக் கருணை மிருதுவாய்
பாதமுன் குளிர்தாமரை அடி தொழ அயனும் மாலும் தேவர்தொழும்
எம்பிரான் கொன்றைச் சடை முடியினும் தாழ்தளம் நின்று தொழும்
பிரணவப் பீடம் நான்கினும் பெரிதோ அடியேனின் நாய்த்தலையும்