67
மூலம்
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்–வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்–பார் எங்குமே.
எளிய தமிழில்
நின் திருநாமம் க்ஷணமேனும் வாயால் சொல்லி கையால் தொழுது
உன் நினைவு கொள்ளாதார் கொடைத்தன்மை குடிப்பிறப்பு கோத்திரம்
நல் கல்வி கேள்வி குணம் குன்றி பிக்ஷைப் பாத்திரமேந்தியே குடில்
பல உழன்றே வருந்துவரே அன்னையே சரியை அரும்பாய் கிரியை மலராய்
என் மனத்தே யோகம் காயாய் ஞானம் கனியாய் அருள்வாய் செல்வமே