69
மூலம்
தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே–
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,
எளிய தமிழில்
தனம் தருவாய் தரமாய்க் கல்வி தருவாய் ஒருநாளும் தளர்வறியா
மனம் தருவாய் நெஞ்சில் வஞ்சமிலா நல்லுறவும் நட்பும் சுற்றமாய்ச்
சுகம் தருவாய் தெய்வீக அழகும் தருவாய் இவையும் தருவாய் நல்லவை
யாவும் தருவாய் இம்மையில் இன்ப வாழ்வும் மறுமையில் தேவயின்பமும்
யாவுமே நீதான் என்றுறையு மெனக்கே உன் கடைக் கண்களால்