70
மூலம்
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
எளிய தமிழில்
கண் கண்டு களித்தது கடம்ப வ்ருக்ஷ வனப் பேரழகில் உன்
பண் கேட்டு இனித்தது நின் வீணைத் திருக்கரமும் திருத்தனமும்
மண் வியக்கும் பசுமை நிறத்தழகியே ஷ்யாமளியே மதங்கர்
குல மாதரசியே எங்கும் காணக் கிட்டாப் பேரழகே உன்னுருவே
என் த்யானக் கருவாய் என்றும் விளங்கும் பேரெழிலே