71
மூலம்
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க–
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?
எளிய தமிழில்
பேரெழிலே உன்னழகுக்கு ஒப்பு ஒருவரற்ற ஒப்பற்ற வல்லிநீ
வேதங்களே உலவிப் பயிலுமுன் திருவடித்தாமரை செந்தாமரையே
குளிர்மதியே திருமுடி அணிப் பூங்கொம்பே இளமையழகே யாமளையே
வளர்மதியாய் நீயிருக்க வேண்டியதை நீகொடுக்க வளமாய் அடியேன்
என்கதிக்கே எக்காலமும் இனியேது குறை