73
மூலம்
தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
எளிய தமிழில்
உன்துதிக்காய் மணமிகு மலர்மாலை கடம்ப ஆரமே
உன்னாயுதம் ஐவகை மலரம்பு சகிதக் கரும்பு வில்லுமாம்
உனைத்துதி உயர்வாம் மந்திர சாதக காலமோ அர்த்த யாமம்
உய்வெமக்கே உன்திருவடியாம் நற்காப்பே நின்நாற்கரங்கள்
உயர்விக்கு முன்திருநாமம் திரிபுரசுந்தரியே ஒளியே முக்கண்ணாம்