76
மூலம்
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
எளிய தமிழில்
குறித்தே னுந்திருக்கோலம் பாதாதிகேசமாய் எந்தை பரமனிடம்
பொருந்து முன்திருமேனி வண்ணமய வடிவுடை வாசஸ்தலமே
பதித்தே னென்மனம் வண்டுகிண்டி அவிழ் தேன்மலர் கொன்றைசடை
அடைத்தேன் காலன்வழி யுன் திருக்கோலத் திருவுளக் குறிப்பால்
சக்தியாய் சிவனுறை ஐவகை அம்புமலராயுத பைரவியே