78
மூலம்
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே.
எளிய தமிழில்
செப்பும் தங்கக் கலசமும் பொருந்து முன்னழகுத் திருமுலைமேல்
சார்த்தும் நறுமண சந்தனக் கலவையும் நின்செவி அணி முத்துக்
கொப்பும் வைரத் தோடும் நின்விழி மதர்த்த மலர்ப் பார்வையும்
துப்பும் இதழில் துவளுமுன் வெண்ணிலவுப் புன்னகையும் என்மனக்
கோவிலில் ஓவியமாய்த் தீட்டினேன் என்விழியிலென்றும்