82
மூலம்
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே?
எளிய தமிழில்
கருணை வதனமே வண்டுமொய் தாமரையமர் அகிலாண்டப் பெரு ஒளியே
மனமதில் என் எண்ணமே பொன் வண்ணமே பெருமகிழ்வே அந்தக் கரணம்
விம்மியே மனம் புத்தி சித்த மஹங்காரம் உள்ளம்யாவுமே அழகாய் மலர்ந்து
பொங்கியே குணம் குறி காலம் நாம ரூபத் தத்துவக் கரையுடைத்தே பரவெளி
பரவியே வாக்குமனமிலா மனோலயம் தேக்கியே சிந்தை தெளிவித்தாயே.