83
மூலம்
விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.
எளிய தமிழில்
தாயே தன்னிகர் பக்திகமழ் மணம் விரவும் புதுமலரிட்டே நாளும் பொழுதும்
நின் நறுமணத் தாமரைத் திருவடி கைமலரர்ச்சிக்க வாயுன் திருநாமம் மொழிய
என் மனமுன் பொற்பாதமமிழ வாக்கு காயம் மனமெனும் முக்கரணமு முனைத்தொழ
இப் பிறவிபோய் தேவர்புகழ் பதவியும் ஐராவதமும் பகீரதியும் வஜ்ராயுதமும் கற்பகச்
சோலை கொண்ட இந்திரனாக்கிடுவாயே இனியவளே என்னின்முகத் தாயே