84
மூலம்
உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
எளிய தமிழில்
இன்முகத்தாளே அண்டங்கள் அடியார்கள் யாவும் நின் உடைமையே அன்னையே
செம்பட்டாடை உடையணி ஒளிர் மதி செஞ்சடையாளே வஞ்சகர் நெஞ்சடையாளே
உடையானின் உடையாளே உய்வுறும் ஆன்மாக்களை உய்த்தேற்று முடையாளே
நூலினுமெல் லிடையாளே எந்தை யிடம்வவ்விடு இங்கெனை யினிப்படையாளே
இவ்வன்னையை உலகீரே பிறவாவரமேந்தக் கண்ணாரக் காண்பீரே