85
மூலம்
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.
எளிய தமிழில்
காணும் திசைதோறும் பின்னிரண்டுகை பாசமும் அங்குசமும்
பேணும் முன்னிரண்டுகை புதுமலர் ஐந்தும் கரும்பு வில்லும்
பூணும் கச்சையும் குங்குமக்குழம்பு பூசு நகில்களும் அவை
மேலணி முத்துமாலையும் மென்கொடி சிற்றிடையும்நான்
காணும் உன்னழகுத் திருமேனியும் என்துன்பம் துடைக்குமே