88
மூலம்
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது–தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.
எளிய தமிழில்
பரமென்றே உனை யென்றும் பூரண சகலமாய்ச் சரணடைந்தேன்
தரமன்று இவன் என்றே நீயெனைப் புறம் தள்ளிவிடாதே அசுரர்
புரமன்று எரிய மேருகிரி வில் நாணேற்ற மாலவன் அஹங்காரம்
கண்டுநின்று தன் புன்முறுவலுறுத்தே புரமழித்து தாமரைவாச மயன்
சிரமொன்று கிள்ளியெறி எந்தை சிவனின் பொற்பாகத் திடமே