மூலம்
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.
எளிய தமிழில்
ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
ஈசனிடப் பாக முறை
இறைவி தன் மைந்தனே
வேழ முகத்தோனே
ஏழை நானும் அபிராமி
புகழ் பாடத் தலைப்பட்டேன்
சிரம மர்ந்து செலுத்துவாய்
செல்வ கணபதியே