90
மூலம்
வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை–விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
எளிய தமிழில்
வருந்தா வகையாய் அமர்ந்திட்டா யென்மனத் தாமரையில்
இருந்தாய் விரும்பியே என்னுள்ளம் உன்சொந்த உறைவிடமாய்
பொருந்தா இனியொரு பொருளில்லை என்மனத்தாமரை நீயுறைய
பிறந்தும் இறந்தும் இனிநான் வருந்தேன் பாற்கடல் அமுதம்
விருந்தாய் தேவர்க்களித்த மெல்லியளே மென்கொடி அபிராமியே