91
மூலம்
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
எளிய தமிழில்
மென்கொடி அபிராமியே மின்னலொளித் திருமுக தேவியே எந்தை
அணைக்கர ஆலிங்கன மென்முலைப் பொன்நிறம் உடையாளே
விரிசடையோன் ஸகித அர்த்தநாரியே அன்னையே காமாக்ஷி தேவியே
உபதேச தக்ஷிணாமூர்த்தியே உவகையுடன் இந்திர பதவியருளும்
துணைக்கரம் நீயே நினைத் தொழு மடியார்க்கே