94
மூலம்
விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
எளிய தமிழில்
நாடி விரும்பி உனைத்தொழும் பேற்றில் அடியவர் விழி நீர் மல்கி
தேன் குடித்த வண்டாய் உளமயங்கி உன்னருளில் நினை விழந்து
நாத் தழுதழுத்து பாடிய புகழ் யாவும் அனைத்தும் பொருளாய்ப்
புரி பித்தாய் வழிபடுமுன் வழி நெறியே அதுவே அபிராமி சமயமாம்
சரி யென்றே சொல்வேன் அன்னையே உனதருள் என்றே