96
மூலம்
கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.
எளிய தமிழில்
கோமள வல்லியாய் அழகிய தாமரைக் கோவி லுறை பேரெழிலே
யாமள வல்லியாய் சாக்ததந்திர சாஸ்திரக் கொடியொத்த பூங்கொடியே
சாமள நிற ஓவியப் பொருளே சகல கலா மயில் சாயை தோய்ந்தவளே
பவள முத்து பல்பொருள் பரவினும் நின்னருளுக்கு இணை தானுண்டோ
ஆமள வுமுனைத் தொழுதாலும் ஏழுலகுக்கும் அரசாவேனே