99
மூலம்
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
எளிய தமிழில்
குயிலா யிசைக்கிறாய் தேவிநீ கடம்ப வனக் கோலாகலத்தில்
மயிலாய் நடமிடுவாய் அம்மநீ இமய மலைப் பெரெழிலில்
வெயிலாய் ஒளிர்கிறாய் உதயக் கதிரவனாய் செந்நிறத்தவளே
மையலாய் உறைகிறாய் மனதர்ப்பணித்த அடியார் நெஞ்சில்
கயிலை யுறை எந்தைக்கு இமவா னளித்த பொன்குழையே