100
மூலம்
குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!
எளிய தமிழில்
குழையத் தழுவினாய் எந்தை திருமேனியை அவர்தம் கொன்றை
மலர்பதிய கமழுமணங் கொண்டதே யுன் திருத்தனங்கள் தாங்கு
மூங்கிலனைய நின்நீள்தோளும் கரும்புவில்லும் வெண்முத்து நகையும்
புன்னகை வதனமும் மானொத்த இருகண்ணும் சதா யென்னுள்ளில்
உதிக்குதே யெப்போதும் ஒளிருதே உதயக் கதிராய்