2
மூலம்
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
எளிய தமிழில்
துணை நீயே தெய்வமே தாயே
இணை நீயே வேதத்தில் தொழிலே
கிளை நீயே வேரே மலரே ஞானமே
கணை மலர் வில் பாசமங்குசம் தரி
துணை திரிபுரசுந்தரி அறிந்தேனே