5
மூலம்
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
எளிய தமிழில்
உறைவாய் ஒளியாய் முப்புர நாயகி
அமர்வாய் தாமரைமே லழகாய் நீயே
அருந்திய நஞ்சை அமுதாய் நிறுத்தியே
பரவெளி விரிந்த தேவியுன் பாதம்
பரவியதே பக்தனென் சிரம்மீதே