7
மூலம்
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.
எளிய தமிழில்
தாமரை யுறை பிரம்மனும் மதிசடை
மணாளனும் மாலும் துதிக்குமுன் திருவடி
குங்குமத் திலகத் திருமுக அழகியே
தயிரிடை மத்தாய்த் தவித்துச் சுழலுமடியேன்
தளர்விலா நற்கதி தருவாய் தாயே