10
மூலம்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.
எளிய தமிழில்
தோன்றி அமர்ந்து சாய்ந்து நடந்தும் நினைவேன் உனையே
ஸாஸ்வத பேரின்ப நிலையே மோட்ச ஸ்தானமே
ஸக்தியே பிரணவமே அருளே உமையே உட்பொருளே
அவதரித்தாய் பார்வதியாய் இமயம்தோன்றி அன்று
ஆதரிப்பாய் ஏழையெனை வணங்குகிறேன் நின்பாதகமலம்