16
மூலம்
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.
எளிய தமிழில்
பைங் கிளியே பசுந்திரு மேனியே அன்பருள்ளம் பொங்கி
வளர் ஒளியே ஒளிக்கெல்லாம் மூல ஒளியே ஆதாரமே
பர வெளி இருந்தும் பரந்தும் கடந்தும் ஈடிணையிலா ப்ரகாசமே
தத்துவ ஒளி யாயொளிர்ந்தும் தத்துவமனைத்தும் கடந்த தாயே
இவ் வெளியேனின் சிந்தனைக்கு மெட்டும் அரிய அதிசயமே