22
மூலம்
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
எளிய தமிழில்
மென்கொடியே வஞ்சி யிளம் பூங்கொம்பே பரிமளமே
என்கால முற்றுமுன்னே பக்குவக்கனி பழுக்க வைத்தபழமே
பெண்யானை உருவுலாவும் பனி இமயத் திருவே
எண்ணற்ற தேவர்தமை பிரம்மன் முதல்பெற்ற அன்னையே
என்னிப்பிறவி போதும் இனிப்பிறவாதே ஆட்கொள்வாய்