24
மூலம்
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
எளிய தமிழில்
கண்மணியே யென்கண்ணின் ஒளியே பொன்னேயென்
பொன்மணியே பொன்னுக் கழகூட்டும் அன்னையே
பிறவிப்பிணி தந்தருளிஅப் பிணிக்கு மருந்தாகும்
முக்திக்கனியே மருந்தே யென்தாயே தேவரமுதக்கனியே
பணியேனினி பிறரைநின் பாதம் பணிந்தபின்னே