25
மூலம்
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே
எளிய தமிழில்
பின் தொடர்வேனுன் பேரடியார் சகிதம்
முன் தவமூல முனையறிந்த நானே
என் பிறவிப்பிணி நீக்கு மருமருந்தே
தன் னொளி தந்துலகுய்விக்குந் தாயே
உன் புகழ்பாடி உன்மலர்பாதம் தொழுவேனே