30
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
எளிய தமிழில்
உமையே ஒன்றியுன் வலமா யுன்னுறை சிவனுடன்
இமைக் கணமும் பிரியா அர்த்தநாரி உருவாய்நீ
எமைக் காத்துன் புகழ்பாட அருள்பாலிக்கு முன்முன்
அமையுறு தோள்மங்கை சுகம்வேண்டேன் மதம்வேண்டேன்
சுமைதரு மறுபிறவி வேண்டேன் வேண்டேன் ஆசையும்