32
மூலம்
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.
எளிய தமிழில்
ஆசையலையில் உழன்று அந்தகன் கையில் சிக்குண்டு
மோசவலை நானே முழுதாய்ப் பின்னி மூடச்செயலாலே
பாசவலையில் துன்பமுற விருந்தயெனை நின்பாத
வாசத்தாமரையில் வசப்படுத்தி பேரொளியா யெனக்கருளி
காசினியில் நேசமாய்க் காத்தருளும் ஈசர்பாகத்து நேரிழையே