33
மூலம்
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே
எளிய தமிழில்
இழைக்கும் வினைமூலம் காலனெனை அணுகி
அழைக்குங் காலம் என்னன்னை உனையேநான்
விழைவேனே அபயந்தருவா யுன்காலடித் தாமரையில்
குழையுமுன் சந்தனக் குவிமுலையி லுருகுமெந்தை
விழையும் கோமளவல்லித் தாயேயுனக்கே வந்தனம்