93
மூலம்
நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
எளிய தமிழில்
நகைப்பே யாமிதுனை அரும்பு முலை தாமரை மொட்டு என்பதெலாம்
வகைப்படி பிறவியற்ற உனையே மலைமகளே அரசியே உரைப்பதெலாம்
மிகையாய் உன்னியல்பை இயம்புவதே என்னறிவுக்கே மிஞ்சியதாம்
உருவாய் உனைக் கற்பித்தே உன்பாத மென்மனக் கண்ணால் கண்டே
அருவாய் ஜோதியாய் என்மனம் நாடி விரும்பியதே