87
மூலம்
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,–விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
எளிய தமிழில்
மொழிக்கும் மனதுக்கு மெட்ட வியலாநின் திருஉருவமென்
விழிக்கும் வழிபாடு யாவுக்கும் எட்டி நின்றதென் விந்தை
தழைக்கும் உன்கருணை நின்னழகு தெய்வத் திருவடிவம்
பழிக்கும் அண்டம் பலவிதமாய் சிவயோகங் கொண்டே
அழிக்கும் எந்தை இடங் கொண்டு கோலோச்சும் பராபரையே