97
மூலம்
ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.
எளிய தமிழில்
அரசோச்சும் சூரியன் சந்திரன் அக்கினி குபேரன் தேவராஜனாம் இந்திரனும்
தாமரையமர் பிரம்மன் திரிபுர மெரித்த எந்தை முரனை யழித்த மாலவன்
பொதிகைமுனி அகத்தியன் பகைவரழி சிவமைந்தன் வேலாயுத முருகன்
பானைவயிறோன் விக்ன விநாயகன் காமன் முதல் சாதித்த புண்ணியர்
அவனியடங்கா எண்ணிலர் போற்றுவர் தையலே உன்னையே