92
மூலம்
பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்–
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.
எளிய தமிழில்
தொழுவார் முதல் தேவர் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் யாவரும்
முகிழ்நகையே அபிராமி அன்னையே பக்குவம் தந்தாய் எனக்கே நானுன்
பதம்கண்டேன் மனம் பற்றினேன் நின்பாதம் ஆட்கொண்டாய் அடியேனை
இனிக்காணேன் பிறிதொரு மதம் மதிமயங்கேன் வழிபிற செல்லேன்
உனையே நினைப்பேன் உனையே தொழுவேன் இன்நகையே