89
மூலம்
சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.
எளிய தமிழில்
பொற்பாகத் திடமே நானிந்த அவனியில் உடம்பொடு உயிரற்று
அறிவுநிலை மறக்குங் காலம் த்யான சமாதி நிலை தனிலே
நான்போகும் சமயம் நின்சேவடி என்சென்னி வைத்தே யருள
விண்பதவி யருளத் தகும் எந்தையுடன் அபிராமியே என்னன்னையே
நீயும்எழுந்தருளி காட்சி கொடுக்க வேண்டுமே வருந்தாமலே