98
மூலம்
தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?–
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
எளிய தமிழில்
தையலே வஞ்சக ருள்ளம் புகா இளம் மாமயிலே தாயே தேவியே
மையலா யுன்னருள் தேடியே வழிகாணு முன்னடியார் தொழு
திருவடி உனதை வருடு எந்தை சங்கரனும் கையணிந்த தீயை
பிறைசூடிய ஆறையும் நின்ஊடல் தணிக்கவே எங்கு மறைத்தாரோ
பொய்நெஞ்சில் புகலறியா இளம் பூங்குயிலே