11
மூலம்
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
எளிய தமிழில்
நின்பாதகமலம் என்னுணர்வுநிறை அமுதக்கலம்
பஞ்சபூத வடிவுடையாள் ஸர்வ ஞான ஸ்வரூபி
அன்பே அருளே அறிவே ஆனந்தமே ஞானமே
வேதத்துவக்கமே வேதமுடிவே வளமாயுன்திருவடி
வெண்காடு நடமிடுமீசன் சிரம் வேயுமே திருமாலையாய்